2025 க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பரில் ஆரம்பம்

2025 க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பரில் ஆரம்பம்; சாதாரண தரப் பரீட்சை 2026 பெப்ரவரியில் நடைபெறும் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை (GCE A/L) நவம்பர் 10, 2025 முதல் டிசம்பர் 5, 2025 வரை நடைபெறும்.

 

மேலும், 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை (GCE O/L) பெப்ரவரி 17, 2026 முதல் பெப்ரவரி 26, 2026 வரை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

இரு பரீட்சைகளுக்கான விரிவான கால அட்டவணைகள் மற்றும் அனுமதி அட்டைகள் உரிய திகதிகளுக்கு அண்மையில் வெளியிடப்படும்.

Recommended For You

About the Author: admin