ஹட்டன் நகரில் நகைக்கடையில் கொள்ளை முயற்சி: பெண் ஒருவர் கைது

ஹட்டன் நகரில் நகைக்கடையில் கொள்ளை முயற்சி: பெண் ஒருவர் கைது

ஹட்டன் நகரில் உள்ள ஒரு நகைக்கடையின் உரிமையாளர் மீது திரவப் பொருள் ஒன்றைத் தெளித்து மயக்கமடையச் செய்ய முயன்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (01) மாலை 6 மணிக்கும் 7 மணிக்கும் இடையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. நகைக்கடைக்கு வந்த குறித்த பெண், உரிமையாளரின் முகத்தில் ஒரு திரவத்தைத் தெளித்து அவரை மயக்கமடையச் செய்ய முயன்றுள்ளார்.

உடனடியாகச் செயற்பட்ட ஹட்டன் பொலிஸார், சந்தேகநபரை குறுகிய நேரத்தில் கைது செய்தனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளில், அந்தப் பெண் தங்கச் சங்கிலியைக் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

Recommended For You

About the Author: admin