கரையோரப் பகுதிகளில் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு ஆண்டுதோறும் பெரும் அபராதம்!
இலங்கையின் கரையோரப் பகுதிகளில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டுமானங்களுக்கு ஆண்டுதோறும் அபராதம் விதிக்கும் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் டேர்னி பிரதீப் குமார, நாடு முழுவதும் 2,500 இற்கும் மேற்பட்ட சட்டவிரோத கட்டுமானங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
“கடந்த 10 முதல் 15 ஆண்டுகளில், கரையோரப் பகுதிகளுக்குள் கணிசமான எண்ணிக்கையிலான அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.
“இந்தக் கட்டிடங்களில் சிலவற்றை இடிக்கும் பணியில் நாம் ஈடுபட்டுள்ளோம். ஏனையவற்றுக்கு ஆண்டுதோறும் பெரும் அபராதம் விதிக்கப்படும். இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகளைச் சீரமைக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது,” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

