மின்வெட்டு குறித்து வெளியாகியுள்ள மகிழ்ச்சியான செய்தி!

கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தேவையான உலை எண்ணெய் கையிருப்பு வழங்கப்பட்டதன் பின்னர் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செயற்பாடுகளை மீளவும் ஆரம்பித்துள்ளது.

இதனூடாக தேசிய மின் தொகுப்பில் 300 மெகாவாட் மின்சாரம் சேர்க்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை மீண்டும் செயற்படுத்துவதன் மூலம் நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் பிரச்சினைகள் இருந்தபோதிலும் மின்வெட்டை நீடிக்காமல் இரண்டு மணித்தியாலங்கள் இருபது நிமிடங்களுக்கு மட்டுப்படுத்த உதவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனியார் ஆலைகளிடமிருந்து மின்சார கொள்வனவு
2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் 27 ஆம் திகதி, இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு, நுரைச்சோலை அனல்மின் நிலையம் புனரமைக்கப்படும் வரை தனியார் ஆலைகளிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கியது.

மின்வெட்டை நீடிக்காமல் மின் உற்பத்தியை பேணுவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தேவையான எரிபொருளை இலங்கை மின்சார சபைக்கு வழங்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் 3ஆம் மின் பிறப்பாக்கி செயலிழந்ததை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: webeditor