சிறிதரன் எம்.பி. மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை – மனோ கணேசன் எம்.பி.
பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவையாக இருக்கலாம் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், குற்றச்சாட்டுகளை முன்வைத்த நபர் இதற்கு முன்னர் தெற்கு அரசியல்வாதிகளுக்கு எதிராக பல முறை முறைப்பாடுகளை செய்திருந்த போதிலும், வடக்கில் நடக்கும் பாரிய மோசடிகள் பற்றிய கருத்துக்களின் அடிப்படையில் சிறிதரன் எம்.பி.யை ஏன் முன்னிலைப்படுத்தினார் என சுட்டிக்காட்டினார்.
இந்தச் சூழல் குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால் ஒரு அரசியல் நோக்கம் இருக்கக்கூடும் என்ற கவலையை எழுப்புவதாக கணேசன் தெரிவித்தார். மேலும், சிறிதரன் எம்.பி. இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதாகவும், உரிய விசாரணையின் மூலம் உண்மை வெளிவரும் என்றும் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

