முன்னாள் SDIG தனக்கு தானே கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைது!
பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (SDIG) பிரியந்த ஜயகொடி கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதாள உலக பிரமுகர் “கேஹல் பத்தர பத்மே” தனக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக பிரியந்த ஜயகொடி பொய்யான புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது. எனினும், ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தனக்கு தானே அச்சுறுத்தல் அழைப்பு விடுத்து இருக்கலாம் என விசாரணையாளர்கள் தற்போது சந்தேகிக்கின்றனர்.
கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜயகொடி மருத்துவ காரணங்களுக்காக ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் CID காவலில் உள்ளார்.

