பொரளை மயான சுற்றுவட்டத்தில் விபத்து; ஒருவர் பலி, ஐவருக்கும் மேற்பட்டோர் காயம்
பொரளை மயான சுற்றுவட்டத்திற்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஐவருக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சீரற்ற பிரேக் (brake) கொண்ட கிரேய்ன் ரக லொறி (crane truck), பல வாகனங்களுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


