இலங்கை ஜனாதிபதி AKD மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக மாலைதீவு பயணம்
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மூன்று நாள் உத்தியோகபூர்வ அரசமுறைப் பயணமாக மாலைதீவுக்கு சென்றுள்ளார்.
மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்சுவின் அழைப்பின் பேரிலேயே இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாலைதீவு ஜனாதிபதி அலுவலகத்தின்படி, 2024 செப்டம்பரில் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் ஜனாதிபதி திஸாநாயக்கவின் மாலைதீவுக்கான முதலாவது அரசமுறைப் பயணம் இதுவாகும்.
இந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதன் 60வது ஆண்டு நிறைவையும் குறிக்கிறது.
ஜூலை 28 முதல் 30 வரை திட்டமிடப்பட்டுள்ள இந்த அரசமுறைப் பயணத்தின் போது, ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மற்றும் மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்சு மற்றும் அந்நாட்டின் ஏனைய உயர்மட்ட அதிகாரிகளுக்கிடையில் இருதரப்பு கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.
இந்தப் பயணத்தின் போது, இலங்கை-மாலைதீவு ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதலாக, இந்த அரசமுறைப் பயணத்தின் போது, ஜனாதிபதி மாலைதீவில் உள்ள இலங்கைத் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சமூக நிகழ்வொன்றில் கலந்துகொண்டு, அங்கு வசிக்கும் இலங்கை புலம்பெயர் சமூகத்தினரை சந்திக்கவுள்ளார்.


