இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரி வடகிழக்கில் நாளை போராட்டம்: கொழும்பில் ஐநா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்..!

இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரி வடகிழக்கில் நாளை போராட்டம்: கொழும்பில் ஐநா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்..!

நீண்டகாலமாக தமிழ் மக்கள் மீது திட்;டமிடப்பட்டவகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேசநீதி கோரிய போராட்டமானது வடக்குகிழக்கு சமூகஇயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்குகிழக்கின் 8 மாவட்டங்களிலும் எதிர்வரும் 26ம் திகதி சனிக்கிழமை காலை பத்து மணிக்கு நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் மட்டக்களப்பு காந்தி பூங்கா, அம்பாறை திருக்கோயில், திருகோணமலை சிவன் கோயிலடி , முல்லைத்தீவில் மாவட்ட செயலகம், கிளிநொச்சி கந்தசாமி கோயில், மன்னார் நகரப்பகுதி வவுனியா புதிய பேருந்து நிலையம் யாழ்ப்பாணம் செம்மணியிலும் நடைபெறவுள்ளது.

உண்மைக்கும் நீதிக்குமான இந்த போராட்டத்தில் தமிழ்தேசிய பரப்பில் பயணிக்கும் அனைவரும் கலந்து கொண்டு தங்களது ஆதரவை தெரிவிக்கவேண்டும் என வடக்குகிழக்கு சமூக இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Recommended For You

About the Author: admin