யாழ் வடமராச்சியில் சட்டவிரோத செயல் ஒன்றில் ஈடுபட்ட இரு பெண்கள் கைது!

யாழ். வடமாரட்சிக் கிழக்கு மணற்காடு பகுதியில் சவுக்கங்காட்டில் சட்டவிரோத சவுக்கு மரங்களை வெட்டி கடத்த முற்பட்ட ஏழு துவிச்சக்கார வண்டிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், மணற்காடு சவுக்கங்காட்டில் சட்ட விரோதமாாக முழு மரமாக சவுக்கம் மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படுவதாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய விசேட குற்ற தடுப்பு பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் அடிப்படையில் இன்று வியாழக்கிழமை (29-09-2022) முற்பகல் காட்டுப் பகுதியினை பொலிஸ் பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க தலமையிலான பொலிசார் சுற்றி வளைத்த போது சட்ட விரோாதமாாாக சவுக்கு மரங்களை வெட்டி கடத்த முற்பட்ட சமயம் ஏழு துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டு ணெ்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.’

கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களையும், கைப்பற்றப்பபட்ட ஏழு துவிச்சக்கர வண்டிகளையும் பருத்தித்துறை பொலிஸாரால் நாளை (30-09-2022) பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலீஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: webeditor