ஓமந்தை தனியார் காணியில் பொலிசாரின் அத்துமீறலால் பதட்டம்..! பாராளுமன்றில் அமைச்சர் பிமலின் கவனத்திற்கு கொண்டுவந்த சத்தியலிங்கம் எம்பி.
வவுனியா பிரதேச அபிவிருத்தி குழு கூட்ட தீர்மானத்தை உதாசீனம் செய்து ஓமந்தை பகுதியில் தனியார் காணியை பொலிசார் கையகப்படுத்த எடுத்த முயற்சியை நிறுத்தும்படி அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க ஆகியோரிடம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் இன்று மதியம் (08.07.02025) பாராளுமன்றத்தில் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
பிரதேச அபிவிருத்தி குழு கூட்ட தீர்மானத்தை உதாசீனம் செய்யும் பொலிசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்கின்ற விடயத்தையும் அமைச்சர்களிடம் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்னாயக்க அவர்கள், இவ்வாறான அமைதிக்கு இடையூறான செயற்பாட்டில் பொலிசார் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார்.


