விமலும் உள்ளே:தெற்கில் அடுத்தடுத்து கைதுகள்..!

விமலும் உள்ளே:தெற்கில் அடுத்தடுத்து கைதுகள்..!

வடக்கில் புதைகுழி அகழ்வுகள் தொடர்கின்ற நிலையில் தெற்கில் முன்னாள் அரசியல்வாதிகள் மீதான கைதுகள் தொடர்கின்றன.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச மற்றும் அவரது பேத்தி டெய்சி விக்ரமசிங்க ஆகியோர் மீது பணச்சலவை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது நடந்துள்ளது.

எனினும் பின்னர், யோசித ராஜபக்சவும் அவரது பேத்தி டெய்சி விக்ரமசிங்கவும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே முன்னைய ஆட்சிக்காலத்தில் பிரபலமான அரசியல்வாதிகளில் இருவர், இரண்டு நாட்களுக்குள் கைது செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்து அடாவடியான நடவடிக்கைளில் ஈடுபட்ட இருவர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் கிடைத்த சாட்சியங்களின் அடிப்படையில் அவ்விருவரும் கைது செய்யப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் இவ்விருவரும் கைது செய்யப்படவுள்ளனர் என்றும், இலஞ்சம் ஊழல் பற்றி இவ்விருவருக்கு எதிராகவும் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைதாகும் அமைச்சர்களுள் விமல் வீரவன்சவும் ஒருவரென சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: admin