சாவகச்சேரி நகரசபையின் முதலாவது சபை அமர்வு..!
சாவகச்சேரி நகரசபையின் புதிய தவிசாளர் ,உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் வரவேற்பு நிகழ்வும்-முதலாவது சபை அமர்வும் 30.06.2025 திங்கட்கிழமை நகரசபையில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது நகரசபை வளாகத்தில் அமைந்துள்ள வைரவர் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து சபை உறுப்பினர்கள் வரவேற்கப்பட்டு சபா மண்டபத்தில் முதலாவது சபை அமர்வு இடம்பெற்றிருந்தது.
நகரசபைத் தவிசாளர் ஸ்ரீபிரகாஷ் தலைமையில் சபை அமர்வு இடம்பெற்றிருந்தது.
மேலும் ஆரம்ப நிகழ்வில் சபையின் செயலாளர் டிஷான், உப தவிசாளர் கிஷோர், சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.


