பேருந்தில் பெண்ணின் கால்களை படம்பிடித்த இளைஞனுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை!

பேருந்தில் பெண்ணின் கால்களை படம்பிடித்த இளைஞனுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை!

பொரளைப் பகுதியில் தனியார் பேருந்தில் பயணித்த இளம் பெண்ணின் கால்களை தனது கைத்தொலைபேசியில் படம்பிடித்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட இளைஞன் ஒருவருக்கு, 20 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பை வழங்கிய கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல, குற்றவாளிக்கு 1,500 ரூபா அபராதம் விதித்ததோடு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 50,000 ரூபாவை நஷ்ட ஈடாகச் செலுத்தவும் உத்தரவிட்டார்.

நஷ்ட ஈடு செலுத்தப்படாவிட்டால், தெமட்டகொடவைச் சேர்ந்த குற்றவாளிக்கு மேலதிகமாக ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இடம்பெற்ற இந்தச் சம்பவம், நீண்ட சட்டச் செயல்முறைக்கு வழிவகுத்தது. இவ்வாறான துன்புறுத்தல் செயல்களில் ஈடுபடுவோருக்கு இது ஒரு தடுப்பு நடவடிக்கையாக அமையும் வகையில் தண்டனை வழங்குமாறு பொலிஸார் நீதிமன்றத்தை கோரியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin