என்.பி.பியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் கடத்தல்? நடந்தது எனன?

வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான சபை கூட்டத்தில் இருந்த போது கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இருவரும் காலி, உனவடுன கடற்கரை பகுதியில் வைத்து இன்று மாலை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான சபை கூட்டம் இன்று காலை 09.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது இந்த கூட்டத்திற்கு வருகை தந்திருந்த தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இருவர் திடீரென காணாமல்போயிருந்தனர்.

இதன்காரணமாக வெலிகம பிரதேச சபை கூட்டத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இருவரும் கடத்திச் செல்லப்பட்டதாக வெலிகம பிரதேச சபையின் உறுப்பினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தனர்.

இதனால் வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான சபை கூட்டத்திற்கான நடவடிக்கைகள் 30 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இருவரும் காலி, உனவடுன கடற்கரை பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இருவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin