ஸ்லோவாக்கியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மோதிரத்தில் 700 வருட பழமையான இலங்கை நீலம் பதிக்கப்பட்டுள்ளது

ஸ்லோவாக்கியாவின் புஸ்டி ஹ்ராட் கோட்டையின் உள்ளக பகுதியில் 700 வருடங்களுக்கு முந்தைய தங்க மோதிரம் ஒன்றை தொல்லியலாளர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

இந்த மோதிரத்தில் இலங்கையில் இருந்து வந்த நீலம் ரத்தினம் இருப்பது அறிவியல் பரிசோதனைகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

2001ஆம் ஆண்டு ஒரு புதையல் வேட்டையாளர் முதன்முதலில் இந்த மோதிரத்தை கண்டுபிடித்தார்.

பின்னர் இது 2023ஆம் ஆண்டில் தான் ஆய்வாளர்களிடம் அது அடைந்தது.

இந்த மோதிரம் 18-கேரட் தங்கத்தில் உருவாக்கப்பட்டதோடு, இரு சிங்கத் தலை வடிவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
அதனிடையே ஒரு சாம்பல் சிவப்புப் கலந்த நீலம் ரத்தினம் பதிக்கப்பட்டுள்ளது.

இந்த 2-கேரட் ரத்தினம் கோரண்டம் வகையைச் சேர்ந்தது. கோரண்டம் என்பது நீலம் மற்றும் ரூபீன்கள் உருவாகும் கனிமமாகும்.

இந்த மோதிரத்தில் இடம்பெற்றுள்ள சிங்க வடிவங்கள், மத்திய யுக ஐரோப்பாவில் வீரத்தை, துணிச்சலையும் அரச அதிகாரத்தையும் கொண்ட சின்னமாக இருந்தன.
குpறிஸ்த்தவ மதத்தில் மறுபிறவி மற்றும் உயிர்ப்பின் அடையாளமாகவும் சிங்கம் கருதப்பட்டது.

ஆனால் இத்தகைய வடிவமைப்புடன் கூடிய மோதிரங்கள் மிகவும் அபூர்வமானவை என்பதால் இது குறிப்பிடத்தக்க ஒன்று என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மோதிரம் அணிந்தவர் ஒரு உயர் மத குருவாக இருந்திருக்கலாம் எனத் தெரிவிக்கின்றனர்.

‘இது ஒரு ஆயரின் உத்தியோகபூர்வ மோதிரமாக இருக்கலாம்’ என ஆய்வாளர்களில் ஒருவரான நோயமி பெல்ஜக் பாசினோவா தெரிவித்துள்ளாhர்
மோதிரத்தை சேதமின்றி ஆய்வு செய்ய, ராமன் ஸ்பெக்ட்ராஸ்கோபி மற்றும் மைக்ரோ எக்ஸ்-ரே ஃப்ளூரசென்ஸ் போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன.

இதன் மூலம் அந்த ரத்தினம் கோரண்டம்தான் என்றும், அது இலங்கையிலிருந்து வந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த ரத்தினம் இலங்கையிலிருந்து மத்திய ஐரோப்பாவிற்கு வந்திருக்கக் கூடிய வர்த்தக பாதைகள் அலெப்போ மற்றும் கான்ஸ்டான்டினோப்பிள் போன்ற இடங்களூடாக இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

மோதிரம் ஆன்மீகமும், பாதுகாப்பும், செல்வமும் ஒருங்கிணைந்த அடையாளமாக இருந்திருக்கலாம்.
இதனை அணிந்தவர் செல்வம் மற்றும் தெய்வீக பாதுகாப்பை விரும்பியவராக இருந்திருக்க வாய்ப்புள்ளது.

இந்த மோதிரம் கண்டுபிடிக்கப்பட்ட புஸ்டி ஹ்ராட் கோட்டை, 12ஆம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்டதாகும்.
ஹங்கேரிய அரசர்களின் முக்கிய கோட்டையாக இருந்த இக்கோட்டை, 14ஆம் நூற்றாண்டில் பயன்பாடின்றி கைவிடப்பட்டது

இக்கண்டுபிடிப்பு, மத்தியயுக ஐரோப்பாவின் வர்த்தகப் பாதைகள், நகைச்செய்தல் கலை மற்றும் சமூக நிலைமைகள் குறித்த புதிய தகவல்களை வெளிப்படுத்துகிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin