கட்டார் ஏன் முதல் இலக்காகிறது?
மொத்த மத்திய கிழக்கிலும் உள்ள ஆகப்பெரிய அமெரிக்க விமானத்தளம் கட்டாரில் உள்ள உதைத் தளமே .இது 60 ஏக்கரில் அமைந்துள்ளது .
10000 அமெரிக்கப்படை இங்கு நிலைகொண்டுள்ளது 1996 இல் இது கட்டப்பட்டது. நூற்றுக்கும் அதிகமான அமெரிக்க போர் விமானங்கள் ட்ரோன்கள் இங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன இதில் கட்டாரிய விமானங்கள் மற்றும் பிரிட்டிஷ் ரோயல் விமானப்படை விமானங்களும் உள்ளன.
அமெரிக்கா இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது முக்கிய விமானங்களை இங்கிருந்து தமது நாட்டுக்கு அவசரமாக எடுத்துச்சென்றுள்ளதாகவும் ஒரு உறுதிப்படுத்தப்படாத தகவல் தெரிவிக்கிறது


