இணைய உலகினை கதிகலங்கச் செய்யும் அதிர்ச்சித் தகவல்: கடவுச் சொற்களை மாற்றுமாறு அறிவுறுத்தல்..!

இணைய உலகினை கதிகலங்கச் செய்யும் அதிர்ச்சித் தகவல்: கடவுச் சொற்களை மாற்றுமாறு அறிவுறுத்தல்..!

இணைய உலகினை கதிலங்கச் செய்யக்கூடிய அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இணைய உலகின் மிகப்பெரிய தகவல் திருட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை பதிவான தகவல் திருட்டுகளில் மிகப்பெரிய அளவிலான தகவல் திருட்டு சம்பவம் இது என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் இணைய உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சுமார் 16 பில்லியன் கடவுச்சொற்கள் உள்ளிட்ட முக்கிய தரவுகள் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 30 பாரிய அளவிலான தரவு தளங்களில் இருந்து இந்த தகவல்கள் கசிந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னணி சமூக ஊடக வலைத்தளங்கள் மற்றும் இணையதளங்களின் தகவல்கள் இவ்வாறு தளவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பயனர் விவரங்கள், கடவுச்சொற்கள் உள்ளிட்ட மிக முக்கியமான தகவல்கள் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உலகில் சுமார் 5.5 பில்லியன் மக்கள் இணையத்தை பயன்படுத்துவதாகவும் பெரும் எண்ணிக்கையிலான பயனர்களின் தகவல்கள் களவாடப்பட்டு இருக்கலாம் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

பயனர்கள் உடனடியாக தங்களது கடவுச் சொற்களை மாற்றி அமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு செய்யத் தவறினால் சைபர் குற்றவாளிகள் இந்த கடவுச்சொற்களை பயன்படுத்தி குற்ற செயல்களில் ஈடுபட கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு களவாடப்பட்ட தகவல்களில் தனிப்பட்ட நபர்களின் தரவுகள் மட்டுமின்றி அரசாங்கங்களின் நாடுகளில் அரசாங்கங்களின் தகவல்களும் களவாடப்பட்டு இருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா, கனடா, சீனா, இந்தியா இஸ்ரேல், சவுதி அரேபியா உள்ளிட்ட 29 நாடுகளின் அரசாங்க இணையதள தகவல்களும் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin