இலங்கைத் தமிழரசுக் கட்சி மட்டக்களப்பு மாநகர சபையின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி (SJB) உறுப்பினர்களின் ஆதரவுடன் சிவராம் பாக்கியநாதன் இன்று மேயராகத் தெரிவு செய்யப்பட்டார்.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தனது ‘X’ (முன்னர் ட்விட்டர்) பதிவில் இந்த முடிவை உறுதிப்படுத்தினார்.
பாக்கியநாதனின் வெற்றி SJB இன் ஆதரவால் சாத்தியமானது என்பதையும் அவர் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, தமது வேட்பாளரை முன்னிறுத்தும் நோக்கில், தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் சபை அதிகாரத்தைப் பெற “வழக்கத்திற்கு மாறான நகர்வுகளை” மேற்கொண்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் குற்றம் சாட்டினார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியுடன் கூட்டணி அமைக்க தேசிய மக்கள் சக்தி முயற்சித்ததாகவும் அவர் கூறினார்.

