மன்னார் திருக்கேதீஸ்வரம் சிவன் ஆலயத்தில் சிறப்பாக இடம் பெற்ற மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகள்(video) .

மகா சிவராத்திரியை முன்னிட்டு பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாக காணப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வரம் சிவாலயத்தில் நேற்றைய தினம் (26.02)புதன் கிழமை   விசேட பூஜை வழிபாடுகள் கோலாகலமாக நடைபெற்றன.

சிறப்பான முறையில் ஆறு சாம பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

இதன்போது ஆலய முன்றலில் பல்வேறு கலை இலக்கிய நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இச் சிவாராத்திரிப் பெருவிழாவிற்கு இலங்கையின் பல பாகங்களிலிருந்தும்  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: ROHINI ROHINI