கச்சத்தீவு பெருவிழா கடற்படையினருக்கு 32 மில்லியன் நிதி..!

கச்சத்தீவு திருவிழா ஒழுங்கமைப்பு பணிகளுக்கான செலவீனமாக 3 கோடியே 20 இலட்ச ரூபாய் நிதி கடற்படையினருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

கச்ச தீவு பெருவிழா எதிர்வரும் 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

அதில் இலங்கை மற்றும் இந்திய பக்தர்கள் உள்ளிட்ட 09 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெருவிழாவில் கலந்து கொள்ள வருவோருக்கான , உணவு , குடிநீர் வசதிகள் , மலசல கூட வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்து கொடுப்பதற்கும் , அதிகாரிகள் , பெருவிழாவுக்கான ஏற்பாட்டாளர்கள் , உள்ளிட்டவர்களுக்கான போக்குவரத்து , தங்குமிட வசதிகள் என பெருவிழாவை , மிக சிறப்பாக முன்னெடுப்பதற்காக கடற்படையினருக்கு 32 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: admin