
உழவு இயந்திரத்தில் ஏற்றிச்செல்லப்பட்ட நெல் அறுவடை செய்யும் இயந்திரம் குடைசாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் இன்று (17) அம்பாறை, கல்முனை பிரதான வீதி, தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் உழவு இயந்திரம் மற்றும் நெல் அறுவடை செய்யும் இயந்திரம் ஆகியன பகுதியளவில் சேதமடைந்துள்ளன .
உயிராபத்து எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.