
ரணில் – ஜெய்சங்கர் இடையே சந்திப்பு
எட்டாவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டின் போது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் கலந்துரையாடினார்.
பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு குறித்து இதன்போது அவதானம் செலுத்தியதாகவும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இருதரப்பு மற்றும் பலதரப்பு கூட்டாண்மைகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
கடல்சார் கூட்டாண்மை மாநாட்டிற்காக தற்போது ஓமானில் உள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடல்சார் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை தொடர்பான முக்கியமான பிரச்சினைகளை கையாள உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.