கீரி சம்பா அரிசியை பதுக்கிய நபருக்கு எதிராக நடவடிக்கை !

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக சுமார் 4,750 கிலோ கிராம் கீரி சம்பா அரிசித் தொகையை மறைத்து வைத்திருந்த விற்பனையாளரை நுகர்வோர் விவகார அதிகாரசபை கண்டுபிடித்துள்ளது.

கொழும்பு 12 இல் உள்ள ஒரு களஞ்சியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அரிசித் தொகை, நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளால் இன்று (15) சுற்றிவளைக்கப்பட்டது.

அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 5 கிலோ கிராம் அடங்கிய 950 பைகள் நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேல் மாகாண பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

அரிசி தொகையை மறைத்து வைத்திருந்த விற்பனையாளர் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் எதிர்காலத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin