மருந்து பற்றாக்குறையால் மக்களுக்கு ஏற்ப்பட்டுள்ள பாரிய நெருக்கடி!

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துப் பற்றாக்குறையால் மக்கள் அல்லல் படுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) செயற்குழு உறுப்பினர் மருத்துவர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

அரச மருத்துவமனைகளில் உள்ள கிளினிக்குகள் தொற்று அல்லாத நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு முழு மாத மருந்துச் சீட்டை வழங்குகின்றன.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் காணப்படும் மருந்துப் பற்றாக்குறையின் காரணமாக, ஆரம்பத்தில் இரண்டு வாரங்களாகவும் பின்னர் ஒரு வாரமாகவும் குறைக்கப்பட்டது.

“சில கிளினிக்குகளில், அரசு மருத்துவமனைகளில் கையிருப்பு இல்லாததால், தனியார் மருந்தகங்களில் மருந்துகளை வாங்குமாறு நோயாளிகள் கேட்கப்படுகிறார்கள்.

இதன் விளைவாக, நோயாளிகள் அடிக்கடி மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டியிருந்தது. “முன்பு அவர்கள் ஒரு மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே வந்தனர், ஆனால் இப்போது பெரும்பாலானவர்கள் ஒவ்வொரு வாரமும் வர வேண்டும்.

பெரும்பாலான மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாகவும், சில மருந்துகள் பற்றாக்குறையாகவும், மற்றவை கையிருப்பில் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor