நாட்டில் 90 சதவீதமான அழகு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன!

தற்போது 90 சதவீத அழகு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக அழகுக்கலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இறக்குமதிக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் அழகு சாதனத்துறையில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

அங்கு அழகுக்கலை நிபுணர் உரையாற்றியுள்ளார்.

உரை
“அழகு நிலையங்கள் 90 சதவீதம் மூடப்படும் அபாய நிலையை எட்டியுள்ளன. இலங்கைக்கு பல பொருட்களை கொண்டு வருவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டதே இதற்குக் காரணம்.

இந்த பொருட்களை 6 மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் எங்களது சீசன் தொடங்கும்.

இப்போது நாம் இந்த தயாரிப்புகளை இறக்குமதி செய்ய வேண்டுமானால், இந்த மாத இறுதிக்குள் இந்த கட்டுப்பாடுகள் அகற்றப்பட வேண்டும். இதை இறக்குமதி செய்ய சுமார் 45 முதல் 60 நாட்கள் ஆகும்.

இந்த துறையில் 4 லட்சம் ஊழியர்கள் உள்ளனர். இவ்வாறான நிலை தொடர்ந்தால் 75% முதல் 80% வரை ஊழியர்கள் குறித்த துறையில் இருந்து விலக வேண்டி ஏற்படும்” எனவும் அழகுக்கலை நிபுணர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor