இலங்கையில் உள்ள பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கையை குறைக்குமாறு வலியுறுத்தும் ஜக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை

இலங்கை பாதுகாப்பு படையில் உள்ள 2 லட்சத்து 47ஆயிரம் பேரை பராமரிப்பதற்கு மக்களால் முடியாது என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.

இதனால் எண்ணிக்கையை உடனடியாக குறைக்குமாறும் ஜெனிவா மனித உரிமைகள் பேரவை இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

உணவுச் செலவு

மக்களுக்கு உணவு வழங்குவதற்கு வசதியில்லாத போது இராணுவத்தின் உணவு செலவு 10 கோடி ரூபாய் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது இடம்பெறும் 51 ஆவது ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்களுக்கமைய, அடுத்த வருடத்திற்கான இராணுவத்தினரின் செலவு 373 பில்லியன் ரூபாவாகும். இது இந்த ஆண்டை விட 14 சதவீதம் அதிகமாகும்.

இராணுவத்தின் பலம்

அவுஸ்திரேலியா, கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜப்பான், மலேசியா, நெதர்லாந்து போன்ற நாடுகளை விட இலங்கை இராணுவத்தின் பலம் 2 லட்சத்து 47ஆயிரம் வரை அதிகரித்துள்ளதாக அங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, பாதுகாப்புப் படைகளில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும். பாதுகாப்புச் செலவினங்களைக் குறைக்க வேண்டும் என்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை, இலங்கைக்கு பரிந்துரை செய்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor