சட்டவிரோதமாக இந்தியா செல்ல முற்ப்படவர்கள் கைது!

மன்னார் தாழ்வுபாடு கடல் பகுதி ஊடாக இந்தியாவிற்கு செல்ல முயன்ற நிலையில் கைது செய்யப்பட்ட 12 நபர்களில் 5 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்போது கைது செய்யப்பட்ட ,ஏனைய 7 சிறுவர்களையும் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

மன்னார் தாழ்வுபாடு கடற்பரப்பினூடாக சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியா செல்ல முயன்ற சிறுவர்கள் உட்பட 12 பேர் நேற்று கடற்படையினரால் தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு
சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மன்னார் ஒலுதுடுவாய் கடற்கரைப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 18 வயதுக்கு மேற்பட்ட 02 ஆண்களும் 03 பெண்களும் அடங்குகின்றனர்.

07 பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். கைது செய்யப்பட்டவர்கள், வெடித்தலத்தீவு பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor