மல்வத்து ஓயாவை அண்மித்த தாழ்வான பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த வெள்ள அபாய எச்சரிக்கையானது நாளை பிற்பகல் 01.00 மணி வரை அமுலில் இருக்கும் என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, அப் பிரதேசங்களில் வசிப்பவர்களும், அவ்வழியாக பயணிக்கும் வாகன சாரதிகளும் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
ஜனவரி 15 ஆம் திகதி, நீர்ப்பாசனத் திணைக்களம் மல்வத்து ஓயா படுகையின் பல தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்தது.
இது இன்று பிற்பகல் வரை அமுலில் இருக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.