மட்டக்களப்பில் உருக்குலைந்த நிலையில் பொது சுகாதார பரிசோதகரின் சடலம் மீட்பு !

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி கலைமகள் வீதியிலுள்ள பூட்டப்பட்டிருந்த வீடொன்றின் உள்ளிருந்து ஆணொருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட சடலம் பொது சுகாதார பரிசோதகர் (Public Health Inspector) ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

ஏறாவூர் மிச்நகர் பொது சுகாதார பரிசோதகராக கடமையாற்றி வரும் இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பூட்டப்பட்ட வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்ததை அறிந்த அயலவர்கள் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் சொகோ தடயவியல் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Recommended For You

About the Author: admin