மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் மண்முனை மேற்கு பிரதேசத்தில் தாழ்நில பகுதியில் உள்ள வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. முன்னாமுனை, மகிழவட்டவான், கரவெட்டி, உள்ளிட்ட பல கண்டங்களில் பல ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது.
இன்னும் ஒரு வாரத்தில் அறுவடை செய்யக் கூடிய காணிகள் பலவும் நீர் நிறைந்து காணப்படுகின்ன. மழை தொடர்ந்தும் நீடித்தால், பல நூறு ஏக்கர் நெற்செய்கை அழியும் நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.