சிகரெட் மற்றும் மதுபான விலைகளில் மாற்றம் !
உடன் அமுலுக்கு வரும் வகையில் சிகரெட் விலைகள் மற்றும் கலால் வகை விலைகள் அதிகரிப்பு.
அதன்படி நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சிகரெட் விலையை அதிகரிக்க இலங்கை புகையிலை நிறுவனம் தீர்மானித்துள்ளது.
கலால் வரி அதிகரிப்புடன் சிகரெட் விலைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நான்கு வகையான சிகரெட்டுக்களின் விலை 5 மற்றும் 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, CAPSTAN மற்றும் John Player சிகரெட்டுகளின் விலை 5 ரூபாவாலும் மற்றும் dunhill மற்றும் Gold Leaf சிகரெட்டுகளின் விலை 10 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மதுபானங்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மதுபானங்களின் விலைகளை 6 சதவீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.