அரசாங்க ஊழியர்களுக்கான பணி நியமனங்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் கட்டுப்பாடொன்றை விதித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
கண்டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த இதனைத் தெரிவித்துள்ளார்.
அரச சேவைக்கு புதிதாக ஆட்சேர்ப்பு செய்வதற்கு சர்வதேச நாணய நிதியம்(IMF) ஒரு குறிப்பிட்ட அளவிற்கு தடை விதித்துள்ளது.
எனினும், வெற்றிடமாகவுள்ள மிகவும் அத்தியாவசியமான பணியிடங்களுக்கு மட்டுமே அரசாங்கம் ஆட்சேர்ப்பு செய்ய முடிவு செய்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.