12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரத்தில் ஈடுபடுத்துவதை தடை செய்யும் வர்த்தமானி வெளியீடு

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்துவதை தடை செய்யும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

கடந்த 6ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில், ஜனவரி முதலாம் திகதி முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்துவது தடை செய்யப்படும் என சுகாதாரப் பிரதி அமைச்சர் டொக்டர் ஹசங்க விஜேமுனி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin