கடந்த அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சராக இருந்த மனுஷ நாணாயக்கார, நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என்று, சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
அவர்கள் சுவிட்சர்லாந்திற்கு சென்று, பின்னர் வேறு ஐரோப்பிய நாட்டிற்கு சென்றுள்ளனர் என்றும், அந்தச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணாயக்கார முதலில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என்றும் அதன் பின்னர் அவரது மனைவி மற்றும் பிள்ளைகளை நாட்டுக்கு அழைத்துச் செல்வதற்கு ஏற்பாடு செய்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் அவரது நெருங்கிய உறவினர் ஒருவரிடம் கேட்டபோது, வருட இறுதியில் தனிப்பட்ட பயணமாக மட்டும் வெளிநாட்டில் இருப்பதாகவும் விரைவில் இலங்கைக்கு வரவுள்ளார் என்றும் தெரிவித்தார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக மக்களை ஏமாற்றிய குற்றச்சாட்டின் பேரில் அவரது சகோதரர் இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.