கடந்த 27ம் திகதியிலிருந்து காணாமல் போயிருக்கும் இக்குழந்தை இன்னும் கிடைக்கவில்லை என தெரியவருகிறது.
தேடிக் கண்டுபிடிக்க வேண்டியது குழந்தையை அல்ல அவரின் தாயாரை என குறிப்பிடபடுகிறது.
தாய் கிடைத்தால் குழந்தை தானாகவே கிடைத்துவிடும் என்கிறார்கள்..!
நடந்தது என்ன ????
சில சமூக ஆர்வலர்கள் கணவருடன் தொடர்பு கொண்டு அறிந்த விடயம் இதோ..!
கடந்த 27ஆம் திகதி கொழும்பில் தொழில் செய்யும் தன் கணவனை சந்திப்பதற்காக மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி தன் குழந்தையுடன் வரும் குறித்த பெண் பஸ்ஸில் Highway ஊடாக கடவத்தை வரை வந்திருக்கிறார்.
அதுவரை தன் கணவரோடு தொடர்பில் இருந்தவரின் தொலைபேசி கடவத்தை வந்து சேர்ந்ததை உறுதிப்படுத்தி கணவன் தங்கியிருக்கும் இடத்துக்கு வருவதாகக் கூறியதோடு தொடர்புகள் நிறுத்தப்படுகிறது.
குழந்தையும், தாயும் 28ஆம் திகதி வரை வராததை தொடர்ந்து அவர்களை தேடத் தொடங்கியதன் விளைவு இன்று வரை 30-12-2024 நேரம் – 3.37Pm) குழந்தையோ, தாயோ கிடைக்கப்பெறவில்லை. இது தொடர்பில் பொலிஸிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் கணவன் வெளிநாட்டிலிருக்கும்போது குறித்த பெண்ணுக்கு பிற நபரொருவருடன் ஏற்பட்ட தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெறுகிறது.
குழந்தை தாயிடம் இருக்கும் போது தாயும், குழந்தையுமாக காணாமல் போயுள்ளனர்.
தாய் கிடைத்தால் குழந்தை தானாகவே கிடைத்துவிடும் என்ற ரீதியிலான விசாரணைகள் பொலிஸார் முன்னெடுத்துவருகின்றார்கள்.