சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக கடனுக்கான அனுமதியை இலங்கை பெற்றுக்கொள்வது தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய, இந்த வருட இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கான அனுமதியை இலங்கை பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை மத்திய வங்கி எதிர்பார்ப்பதாக ரொய்ட்டர்ஸ் செய்தி சேவை தெரிவித்துள்ளது.
கலந்துரையாடல்
சர்வதேச நாணய நிதியத்தின் முதலீட்டாளர்களுடன் நேற்று(23.09.2022) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகள் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளதாக அந்த செய்தி சேவை தெரிவித்துள்ளது.