ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கதிரை அல்லது கை சின்னத்தில் போட்டியிடும்!

உள்ளுராட்சிமன்ற மற்றும் மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான கூட்டணி அமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய விரைவில் இக்கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் கூறியுள்ளார்.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மறுசீரமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் பலருடனும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தம்முடன் இணையவுள்ளவர்கள் யார் என்பது குறித்து விரைவில் அறிவிப்பதாகவும்ஈ தொகுதி அமைப்பாளர்களுக்கும் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் ஜனவரி 2ஆம் திகதியிலிருந்து கட்சியின் புதிய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் ஆட்சியமைத்த கட்சி என்ற ரீதியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இனிவரும் தேர்தல்களில் கதிரை அல்லது கை சின்னத்தில் போட்டியிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin