இரணைமடு பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த உந்துருளியை அதே திசையில் பயணித்த டிப்பர் வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது
கிளிநொச்சி வலையகல்வி அலுவலகம் முன்பாக இடம்பெற்ற விபத்தில் டிப்பர் வாகனம் உந்துருளியில் பயணித்தகுடும்பத்தை சுமார் 200 மீற்றர் தூரம்வரை இழுத்து சென்று விபத்துக்குள்ளானது உந்துருளியில் பணித்த ஒரேகுடும்பத்தைச்சேர்ந்த தாய், தந்தை 02 வயது குழந்தை மற்றும் 07 வயது மகன், படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டனர் இதில் 02 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது டிப்பரின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார் அவர் மதுபோதையில் இருந்தாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
விபத்து தொடர்பாக கிளிநொச்சி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


