ரயில் சேவைகள் குறித்து அமைச்சர் ஒருவர் வெளியிட்டுள்ள செய்தி!

இந்தியாவின் நிதியுதவித் திட்டத்தின் கீழ் வடக்கு மாகாணத்திற்கான ரயில் பாதை புனரமைப்பு பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் (2023) ஆரம்பிக்கப்பட இருக்கின்றது.

இந்த நிலையில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஐந்து மாதங்களுக்கு வடக்கு மாகாணத்திற்கான ரயில் சேவைகள் நிறுத்தப்படும் என ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று தமிழ் பத்திரிகைகளின் ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கிற்கான ரயில் சேவைகள் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியாவின் நிதியுதவித் திட்டத்தின் கீழ் வடக்குக்கான ரயில் பாதை புனரமைப்பு பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது.

வடக்கு மக்களுக்கு சிறந்த ரயில் சேவையை பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே வடக்குக்கான ரயில் பாதை புனரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மேற்படி புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக ஜனவரி மாதம் முதல் ஐந்து மாதங்களுக்கு வடக்கிற்கான ரயில் சேவைகள் நிறுத்தப்பட உள்ளன.

அரச ஊழியர்களின் நலன் கருதி காங்கேசன்துரைக்கும் கிளிநொச்சிக்கும் இடையில் விசேட ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டு அது சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதே வேளை வடக்குக்கான இரவு சொகுசு ரயில் சேவைகளும் நடைமுறையில் உள்ளன என்றார்.

Recommended For You

About the Author: webeditor