இலங்கைக்கு நன்கொடையாக கிடைத்துள்ள மருந்து பொருட்கள்

உலகின் முன்னணி இலாப நோக்கற்ற வழங்குனர்களில் ஒன்றான, அமெரிக்காரேஸ் (Americares), 773,000 அமெரிக்க டொலர் பெறுமதியான, அவசரமாக தேவையான மருத்துவ பொருட்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

இந்த நன்கொடையானது, மகப்பேறுக்கு முந்தைய மற்றும் பாலூட்டும் தாய்மாருக்கான விட்டமின்கள், நாள்பட்ட நோய்க்கான மருந்துகள், சிரிஞ்ச்கள் மற்றும் கையுறைகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளைக் கொண்டுள்ளது.

மருத்துவ பொருட்களை நன்கொடை

வோஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க அமெரிக்காரேஸ் இந்த மருத்துவ பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

மேலும் எதிர்காலத்தில் நன்கொடைகளை வழங்குவதற்கு உதவும் வகையில் இலங்கை மற்றும் அமெரிக்காவிலுள்ள சுகாதார அமைச்சுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

சான்றிதழ் கையளிக்கும் நிகழ்வு
இந்த முக்கிய நிகழ்வை குறிக்கும் வகையில் வோஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் முறையான சான்றிதழ் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

தூதுவர் மகிந்த சமரசிங்கவிடம், அமெரிக்கர்ஸ் துணை மருத்துவ அதிகாரி சாதனா ராஜமூர்த்தி இந்த சான்றிதழை கையளித்துள்ளார்.

அமெரிக்கர்ஸ் என்பது ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட நிவாரணம் மற்றும் மேம்பாட்டு அமைப்பாகும், இது வறுமை அல்லது பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களின் உயிரைக் காப்பாற்றுகிறது மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

Recommended For You

About the Author: webeditor