அநுராதபுரத்தில் ரயிலில் மோதுண்டு இரு பெண்கள் பலி

அநுராதபுர புதிய நகர் பகுதியில் ரயிலில் மோதுண்டு இரு பெண்கள் உயிருழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

செல்பி எடுக்கும் போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்ததாகவும் தெரிகிறது.

அநுராதபுரம் பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் கலந்து கொள்வதற்காக இரத்தினபுரியைச் சேர்ந்த தாயும் மகளும் அனுராதபுரம் புகையிரத நிலையத்திற்கு அருகில் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்த போது காங்கசந்துறையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற Express ரயிலில் மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

18 வயது இளம் பெண்ணும் முப்பத்தேழு வயது தாய் ஒருவருமே உயிரிழந்தனர்.

உயிரிழந்த 18 வயது பெண் தனது நண்பரின் தாயுடன் புகைப்படம் எடுக்க வந்தபோது, ​​இருவரும் இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin