எலிக்காய்ச்சல் தொடர்பில் நிபுணர் குழு யாழ்.போதனா வைத்தியசாலையில் ஆய்வு

எலிக்காய்ச்சல் தொடர்பில் நிபுணர் குழு யாழ்.போதனா வைத்தியசாலையில் ஆய்வு

யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக எலிக் காய்ச்சலால் அதிகளவிலான நோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது.

 

இந்நிலையில் கொழும்பு தொற்று நோய்யியல் பிரிவை சேர்ந்த வைத்தியர் பிரபா அபயக்கோன் உள்ளிட்ட குழுவினர் இன்று (12) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து ஆய்வு நடவடிக்ககைகளில் ஈடுபட்டுள்ளனர்.

 

இன்று காலை யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்த குழுவினர் அங்கு ஆய்வு நடவடிக்கைளில் ஈடுபட்டதுடன் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி,பொது வைத்திய நிபுணர் த.பேரானந்தராஜா உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: admin