அடுத்த 36 மணி நேரத்தில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்து வருவதால், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடுத்த 36 மணி நேரத்தில் பலத்த மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் மேல் மாகாணம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் நாளை காலை மழை பெய்யக்கூடும்.என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது