முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மண்ணகண்டல், வசந்தபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து இராணுவம் வெளியேறிய நிலையில், அந்த கிராமங்களை அண்டிய 80 ஏக்கர் தேக்குமரம் கடந்த 8ஆம் திகதி மரக் கடத்தல்காரர்களால் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இந்த காணிகள் முல்லைத்தீவு பிரதேசத்தில் வசிப்பவர்களுடையது என்பதனால் இராணுவத்தினர் அந்த காணிகளை விட்டு வேறு அரச காணிக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
விடுவிக்கப்பட்ட காணியை மக்களிடம் மீள ஒப்படைக்குமாறு அரச அதிகாரிகளிடம் இராணுவத்தினர் கையளித்துள்ளதுடன், கையளிக்கப்பட்ட மறுநாளே அரச பகுதியில் இருந்த தேக்குமரத் தோட்டம் முற்றாக வெட்டப்பட்டுள்ளது.
வனப் பாதுகாப்புத் திணைக்களம் விசேட தோட்டத் திட்டமாக இந்த தேக்குமரத்தோட்டத்தை நட்டிருந்ததுடன் இராணுவ முகாம் காரணமாக தேக்குமரத் தோட்டம் பூரண பாதுகாப்பைப் பெற்றிருந்தது.
இது குறித்து முல்லைத்தீவு வன பாதுகாப்புத் திணைக்கள பொறுப்பாளர் அலுவலகம் புதுக்குடியிருப்பு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது.