கட்டுமர படகொன்று விபத்து-ஒருவர் உயிரிழப்பு!

செல்லக்கதிர்காமம் பகுதியில் அக்கரவிஸ்ஸ வாவியில் 5 மாணவர்கள் பயணித்த கட்டுமர படகொன்று கவிழ்ந்துள்ளது விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், உயிரிழந்தவர் செல்லக் கதிர்காமம் பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய மாணவராவார்.
இந்த விபத்து இன்று மாலை மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இம்முறை உயர்தரத்தில் கல்வி பயிலும் 5 மாணவர்கள் இந்த படகில் பயணித்த நிலையில், படகு கவிழ்ந்ததை தொடர்ந்து கிராம மக்கள் உடனடியாக விரைந்து அவர்களை காப்பாற்றியுள்ளனர்.
இதேவேளை உயிரிழந்த மாணவனின் சடலம் கதிர்காமம் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin