மதுபான விற்பனை அனுமதிப்பத்திரம் – வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடை

மதுபான விற்பனை அனுமதிப்பத்திரத்துக்கான வருடாந்த கட்டணத்தை அதிகரிப்பதற்காக கடந்த அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கை மதுபான அனுமதிப்பத்திரம் வைத்திருப்போர் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து ஏ.எச்.எம்.டி நவாஸ், குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இலங்கை மதுபான உரிமதாரர்கள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் பிரதிவாதிகளாக நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்டோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

வர்த்தமானி அறிவித்தல் இலக்கம் 1/2024 மதுபான அனுமதிப்பத்திரத்துக்கான வருடாந்தக் கட்டணத்தை 20 மில்லியன் ரூபாவாக உயர்த்தியதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.

வருடாந்த உரிமக் கட்டணத்தை அதிகரிப்பதன் மூலம் தமக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டதாகவும், தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் கூறி இந்த மனுவை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதுமாத்திரமின்றி, 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி உரிமக் கட்டணத்தை வசூலிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin