முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொழும்பு மேலதிக நீதவானால் இன்று வியாழக்கிழமை (21.11) பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெள்ளவத்தையைச் சேர்ந்த வர்த்தகர் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான காசோலைகளை வழங்கி மோசடி செய்ததாக டக்ளஸ் தேவானந்தா அளித்த முறைப்பாட்டின் பிரகாரம், டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றத்தில் முன்னிலையாகாமையால் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தா சுகயீனம் காரணமாக நீதிமன்றில் முன்னிலையாகவில்லையென அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
எனினும் டக்ளஸ் தேவானந்தாவின் சுகவீனம் தொடர்பான மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த விசாரணையை கொழும்பு மேலதிக நீதவான் எதிர்வரும் ஜனவரி மாதம் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.