பிரித்தானிய இந்து ஆலயம் மீது தாக்குதல்!

பிரித்தானியாவின் லீசெஸ்டர்ஷையர் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் வெடித்துள்ள நிலையில் அந்த பகுதியில் உள்ள இந்து ஆலயம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்த காணொளியும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் இடம்பெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வெற்றிகொண்டது. இதனை தொடர்ந்து குறித்த பகுதியில் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது.

இந்திய தூதரகம் கண்டனம்
இந்த சம்பவத்தின் ஒரு பகுதியாக இந்து ஆலயம் மீது தாக்குதல் நடதப்பட்டுள்ளது. இந்துக் கோவில் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு லண்டன் நகரில் உள்ள இந்திய தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இந்த வன்முறை சம்பவம் தொடர்பில் இதுவரையில் 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் ஒருவருக்கு 10 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த கூடுதல் புதுப்பித்தல் தகவல்களை லீசெஸ்டர்ஷையர் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

கிழக்கு லீசெஸ்டர்ஷையரில் ஏற்பட்ட குழப்பத்தின் போது அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் உறுதிப்படுத்திய போதிலும், குற்றம் பற்றிய மேலதிக விவரங்கள் வெளியிடப்படவில்லை.

கூடுதலாக 18 பேர் கைது

அமைதியின்மையைச் சமாளிக்கும் படையின் தற்போதைய நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டவர்களில் சிலர் பர்மிங்காம் உட்பட நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் இன்று வெளிப்படுத்தினர்.

வன்முறை, பொதுவான தாக்குதல், தாக்குதல் ஆயுதம் வைத்திருந்தல் மற்றும் வன்முறை சீர்குலைவு உள்ளிட்ட பல குற்றங்களுக்காக ஞாயிற்றுக்கிழமை இரவு கூடுதலாக 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor