பதவியேற்ற விஜித ஹேரத்: கையோடு கடமைகளையும் பொறுப்பேற்றார்

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக விஜித ஹேரத் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் நியமிக்கப்பட்ட நிலையில், நேற்று பிற்பகல் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் எளிமையானதொரு வைபவத்தில் தனது கடமைகளை அவர் பொறுப்பேற்றார்.

இந்நிகழ்வில் அமைச்சின் உயர் அதிகாரிகள் மாத்திரமே கலந்துகொண்டனர்.

அமைச்சர் விஜித ஹேரத் 2000ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராக கம்பஹா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில், நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சர் விஜித ஹேரத், கடந்த 2005ஆம் ஆண்டு அமையபெற்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் சிறிது காலம் கலாச்சார விவகாரங்கள் மற்றும் தேசிய மரபுரிமைகள் அமைச்சராக பணியாற்றியுள்ளதுடன், நடைபெற்ற பொதுத் தேர்தலுக்கு முன்னரான ஒன்றரை மாதகாலம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் விஜித ஹேரத் களனிப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை விஞ்ஞானப் பட்டதாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin